• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

சென்னை பெரும் தலைவர் காமராஜர் நினைவு மண்டபத்தில் விஜய்வசந்த் மரியாதை

கன்னியாகுமரி மக்களவைத் தேர்தலில் இரண்டாவது முறையாக பாஜக வேட்பாளர் பொன். இராதிகிருஷ்ணனை தோற்கடித்து முன்பு பெற்ற வாக்குகளை விட கூடுதலாக பெற்று காங்கிரஸ் கட்சியின் சார்பில் வெற்றி பெற்ற விஜய் வசந்த் 18_வது நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்ற வர். தற்சமயம் நாடாளுமன்ற கூட்டம் ஒத்திவைக்கப்பட்டதால். சென்னைக்கு வந்த விஜய் வசந்த். சென்னையில் உள்ள (கிண்டி) பெரும் தலைவர் காமராஜர் நினைவு மண்டபத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்வில் தமிழ் நாடு காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் எம்.எஸ்.காமாராஜ், வர்த்தக பிரிவு செயல் தலைவர் எம்.ஜி.ராமசாமி மற்றும் சென்னையை சேர்ந்த கட்சியின் பல்வேறு பொறுப்பாளர்கள் கலந்து கொண்டார்கள்.