• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

ஆண்டிபட்டியில் உயிர்நீத்த ராணுவ வீரர்களுக்கு வீரவணக்கம்!

தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் காஷ்மீர் மாநிலம் புல்வாமா என்ற இடத்தில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 40 பேர் வீரமரணம் அடைந்தனர். அவர்களுடைய 3வது ஆண்டு நினைவு நாளான நேற்று ஆண்டிபட்டி அருகே வைகை அணை வளாகப் பகுதியில், 40 ராணுவ வீரர்களின் அலங்கரிக்கப்பட்ட புகைப்படத்தை வைத்து இந்து முன்னணியினர் பூஜை செய்து வழிபட்டு மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.

நிகழ்ச்சிக்கு இந்து இளைஞர் முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மனோஜ் குமார் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் டாக்டர் ஈஸ்வரன் செல்வம் சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் மாவட்ட செயற்குழு மொக்க ராஜ், ஒன்றிய தலைவர் கனகராஜ், நகர தலைவர் கருப்பையா, நிர்வாகிகள் ஆட்டோ ராஜா, நகர பொறுப்பாளர்கள் பகவதி ராஜ்குமார், ஜெயபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.