• Thu. Mar 5th, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

எம்.ஜி.ஆரின் 105வது பிறந்தநாளுக்கு விருதுநகரில் புகழஞ்சலி

Byகாயத்ரி

Jan 17, 2022

எம்.ஜி.ஆரின் 105வது பிறந்த தினத்தினை முன்னிட்டு விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் R.K.ரவிச்சந்திரன் மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

சத்துணவு கண்ட சரித்திர நாயகன் , கழக நிறுவனர், மக்கள் திலகம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 105வது பிறந்த தினத்தினை முன்னிட்டு அதிமுக கழக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் மற்றும் கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கினங்க விருதுநகர் கிழக்கு மாவட்ட கழகத்தின் சார்பாக இராமுத்தேவன்பட்டி விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக அலுவலகத்தில் அமையபெற்றுள்ள மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் திருவுருவ படத்திற்கு விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் R.K.ரவிச்சந்திரன் மலர் தூவி மாலை அணிவித்து புகழஞ்சலி செலுத்தினார்.

இந்நிகழ்வின்போது முன்னாள் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் எதிர்கோட்டை S.G.சுப்ரமணியன், சாத்தூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் K.S.சண்முகக்கனி, இராஜை கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் மாரியப்பன், வெம்பக்கோட்டை யூனியன் ஒன்றிய கவுன்சிலர் பல்க் முனியசாமி ,மாவட்ட விவசாய அணி செயலாளர் KVK.ராஜு , மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் சீத்தாராமன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர் யூனஸ் முஹம்மத், மாவட்ட எம்ஜிஆர் மன்ற பொருளாளர் ராமலிங்கம், மாவட்ட அண்ணா தொழிற்சங்க துணை தலைவர் சுப்புராஜ், மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி துணை செயலாளர் சுப்ரமணியன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் நல்ல கணேஷ் மாவட்ட மகளிரணி இணை செயலாளர் பரமேஸ்வரி , மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் அணி துணை செயலாளர் செந்தூர்பாண்டியன் ஹவுசிங் போர்டு கிளை கழக செயலாளர் கண்ணன் வெற்றிலையூரணி கிளை கழக செயலாளர் சபாபதி,கழக பிரமுகர் பார்த்தசாரதி, ஆலங்குளம் ரமேஷ் மற்றும் கழக நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்.