இந்தியாவில் நாட்டு மாடு பாதுகாப்பு, மகா யாத்திரை. கடந்த செப்டம்பர் திங்கள் 27_ம் நாள் காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி நோக்கி. நாட்டு மாடுகளை பாதுகாப்போம், விவசாயின் தோழன் நாட்டு மாடு இதனை இறைச்சிக்காக பயன் படுத்தக் கூடாது என்ற கோரிக்கையுடன்.

பாலகிருஷ்ண குருசாமி ஒரு ஒற்றை நாட்டு மாட்டுடன். கடந்த செப்டம்பர் மாதம் 27_ம் நாள் காஷ்மீரில் தொடங்கிய நடைபயணம் இன்று (மார்ச்_27)ம் தேதி கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரா பிள்ளையார் கோவிலில் பிரார்த்தனை உடன் நிறைவு பெற்றது.
காஷ்மீர்_கன்னியாகுமரி இடையே.4900 கி. மீட்டர் நடைபயணத்தில் கடந்து வந்த மாநிலங்களின் எண்ணிக்கை 14.நடைபயண குழுவினருக்கு உதவியாளர்கள்,ஒரு வெட்நெரி மருத்துவர் அவருக்கு உதவியாளர்,உணவு தயாரிப்பு என பல பேர் கொண்ட குழு இரண்டு வாகனத்தில் உடன் பயணபெற்றார்கள்.
கன்னியாகுமரியில் நாட்டு மாடு பாதுகாப்பு நடைபயண குழுவினரை. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வரவேற்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. திடிரென்று அண்ணாமலை டெல்லி சென்றுவிட்டதால். இக்குழுவினருக்கு, அண்ணாமலை காண் ஒளி காட்சி மூலம் அவரது வாழ்த்துகளை தெரிவித்தார்.
விவேகானந்தா கேந்திரா வளாகத்தில் இவ்விழா நடைபெற்றதால். வளாகத்தில் உள்ள கேந்திர பள்ளி மாணவ, மாணவிகள்,ஆசிரியர்கள் இந்த நிகழ்வில் முழுமையாக பங்கேற்றனர்.
பாலகிருஷ்ண குருசாமி பேட்டி.
காஷ்மீரில் இருந்து புறப்படும் போது சில சங்கடங்கள் இருந்தன. பல்வேறு கால சூழலில் நாட்டு மாடுடனா இந்த பயணம் நாட்டு மக்களின் மத்தியில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கும் என நம்புகிறேன்.

நாட்டு மாட்டுடனா இந்த பயணம் எந்த மதம் சாதி, என்பதையெல்லாம் கடந்து. இந்தியாவில் நாட்டு மாடு எல்லோருக்குமானது. விவசாயின் தோழன் இன்று இந்த இனம் அருகி வருகிறது. இதை தடுக்க. கன்னியாகுமரி முதல் காஷ்மீரம் வரையிலான மக்கள் அவரவர் வீடுகளில் ஒரு நாட்டு மாட்டை வளர்ப்பதை கடமையாக கொள்ளவேண்டும். அடி மாட்டிற்கு நாட்டு மாடுகளை தான் அதிக எண்ணிக்கையில் கொல்லப்படுகிறது. இதை தடுக்க வேண்டும் என்ற எண்ணம் நம் அனைவருக்கும் வந்தால். எனது இந்த நீண்ட நெடிய பயணம் வெற்றி பெற்றதாக கருதுவேன். வேற்றுமையில் ஒற்றுமை என்பதே நம்மின் தாரக மந்திரம் என தெரிவித்தார்.