தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து ஓட்டுநர் மதியழகன் ஹைட்ரோ குளோரிக் ஆசிட் ஏற்றி வந்த டேங்கர் லாரி திண்டுக்கல் – கரூர் செல்லும் நான்கு வழிச்சாலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தது,

அதே போல் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து சுண்ணாம்புக்கல் ஏற்றிய லாரி நாமக்கல் நோக்கி சென்று கொண்டிருந்துள்ளது. அப்போது பின் தொடர்ந்து சென்றபோது, டேங்கர் லாரியின் பின்புறம் சுண்ணாம்புக்கல் ஏற்றி வந்த லாரி மோதியதில், ஆசிட் ஏற்றி வந்த லாரியின் பைப் கேட்வால்வு பகுதியில் இடித்து விபத்துக்குள்ளாகி கேட் வால்வு உடைந்தது. இதில் உடனடியாக நான்கு வழிச்சாலையில் ஒரு பகுதியில் டேங்கர் லாரி நிறுத்தப்பட்டது.

ஆசிட் கசிவு அதிகமாக ஏற்பட்டதால் நெடுஞ்சாலை பகுதிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் புகைமூட்டம் சூழ்ந்து மிகுந்த நெடியை ஏற்படுத்தியது. இதனால் அப்பகுதி முழுவதும் போக்குவரத்து பாதிக்கப்பட்டு இருந்தது. தாடிக்கொம்பு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போக்குவரத்தை மாற்றி அமைத்து. தீயணைப்புத் துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக தண்ணீரை பீச்சி அடித்து ஆசிட் புகை மற்றும் தாக்கத்தை கட்டுக்குள் கொண்டு வரப் போராடி வருகின்றது. விபத்து குறித்து தாடிக்கொம்பு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.