மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள பூச்சிபட்டி அரசு கள்ளர் மேல்நிலை பள்ளியில் நடிகர் சௌந்தர் ராஜாவின் மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை சார்பாக ஒன்பதாவது ஆண்டு விழாவை முன்னிட்டு மரக்கன்று வழங்கும் விழா நடைபெற்றது.

இதில் அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் தியாகராஜன் முன்னிலையில் ஆசிரியர்கள் 50 ஆர்வமுள்ள பள்ளிமாணவ மாணவிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கினர்.
மேலும் பள்ளி வளாகத்தில் தண்ணீர் ஊற்றி மரக்கன்றுகளை வளர்த்து வரும் 5 மாணவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவம் செய்யப்பட்டது.
தொடர்ந்து தற்போது மழைக்காலம் என்பதால் பள்ளி மாணவ மாணவிகளின் அவர்களது வீட்டில் நட்டு வைத்து வளர்த்து பராமரிக்க வேண்டுகோள் விடுத்தனர்.
இதில் பள்ளி தலைமைஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர். மேலும் மரங்களின் பயன்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.