தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மைதானத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வண்ணம் வனத்துறை மற்றும் மருத்துவ மாணவர்கள் இணைந்து 700 மரக்கன்றுகள் நடப்பட்டன.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள அரசு தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வனத்துறை மற்றும் மருத்துவ மாணவர்கள் இணைந்த மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தேனி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் முத்துசித்ரா தலைமை தாங்கினார். வனத்துறை உதவி வன பாதுகாவலர் செசில் கில்பர்ட் முன்னிலை வகித்தார்.
தமிழ்நாடு வனத்துறையின்காலநிலை மாற்றத்திற்கான தமிழ்நாடு உயிர்பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்குதல் திட்டத்தின் கீழ் இம்மரக்கன்றுகள் நடப்பட்டன
தேனி அரசு மருத்துவக் கல்லூரியின் பிரம்மாண்டமான மைதானத்தின் ஓரப்பகுதிகள் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தேக்கு தோதகத்தி வேம்பு பலா மா நாவல் உள்ளிட்ட 700 மரக்கன்றுகளை ஏராளமான ஆண், பெண் மருத்துவ மாணவர்கள் சீருடையில் ஆர்வத்துடன் நட்டது காண்போரை கவர்ந்தது.
நிகழ்ச்சியில் எலும்பு மூட்டு மருத்துவ பேராசிரியர் ஜெய்கணேஷ் , வனத்துறை வனச்சரகர் சாந்தகுமார் , வனவர்கள் வேலுச்சாமி , பாண்டியராஜன் , தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் மற்றும் வனத்துறை அதிகாரிகள் மருத்துவ மாணவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.













; ?>)
; ?>)
; ?>)