• Mon. May 6th, 2024

மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே மரம் விழுந்து நிழற்குடை சேதம்…

ByKalamegam Viswanathan

Jun 28, 2023

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருவார்கள். இந்த நிலையில் கோவிலை சுற்றிலும் பக்தர்கள் செல்லும் பகுதியில் நிழற்குடை அமைக்கப்பட்டு அதன் வழியாக பக்தர்கள் நடந்து சென்று சாமி தரிசனம் செய்வார்கள்.

இந்த நிலையில் இன்று மதுரை மாநகர் பகுதி முழுவதிலும் மாலை முதல் பலத்த காற்று வீசி வரும் நிலையில் மதுரை மீனாட்சியம்மன் கோவில் அம்மன் சன்னதி அருகே நின்று கொண்டிருந்த பழமையான வேப்பமரம் திடீரென முறிந்து நிழற்குடை மீது விழுந்தது.

அப்போது நல்வாய்ப்பாக நிழற்குடையின் கீழ் இருந்த பக்தர்கள் எவ்வித காயமும் இன்றி தப்பினர்.

மரம் விழுந்தததில் நிழற்குடை சேதமடைந்தது இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மீனாட்சியம்மன் கோவில் தீயணைப்புத்துறையினர் உடனடியாக மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். மீனாட்சியம்மன் கோவில் அம்மன் சன்னதி அருகே திடீரென மரம் முறிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *