
மதுரை அவனியாபுரத்தில் 1957 ஆம் ஆண்டு ஸ்ரீ ஆண்டாள் மாரியம்மன் திருக்கோவில் உருவாக்கப்பட்டது. திருக்கோவிலில் சின்ன மாரியம்மன் கோவில் இன்று அழைத்து பொதுமக்கள் வழிபட்டு வந்தனர். இந்நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு கோவிலுக்கு சொந்தமாக இடம் வாங்கி புதிய கோவில் கட்டும் பணிகள் நடைபெற்ற போது ஏற்பட்ட விபத்தின் காரணமாக பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் மீண்டும் இந்த ஆண்டு கோவில் கட்டும் பணிகள் தொடங்கி இன்று புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஆண்டாள் மாரியம்மனுக்கு பால், மஞ்சள், இளநீர், பன்னீர் ஊற்றி அபிஷேகம் நடைபெற்ற, பின்னர் அலங்காரத்துடன் தீபாராதனை காட்டப்பட்டது. முன்னதாக கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம் போன்ற சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து நேற்று யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. இதில் அவனியாபுரம் சுற்றுப்பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதைத் தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

