• Sun. Oct 6th, 2024

போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பேருந்து நிலையத்தில் திடீர் விசிட்..

Byகாயத்ரி

Apr 14, 2022

தமிழகத்தில் இன்று முதல் ஏப்ரல் 17ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் புத்தாண்டு மற்றும் புனித வெள்ளி விடுமுறையை தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை ஆகும். இதையடுத்து தொடர் விடுமுறையில் மக்கள் அதிக அளவில் சொந்த ஊருக்குச் செல்வதை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகளில் அதிக அளவு கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சென்னையில் இருந்து வெளியூருக்கு செல்லும் தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் பெறுகிறார்கள் என்ற புகாரின் அடிப்படையில், தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் திடீர் ஆய்வு நடத்தினார். அதில் பயணிகளிடமிருந்து 3 ஆயிரத்திற்கும் மேல் வசூலிக்கப்பட்ட அதை கண்டறிந்து அவர் இயல்பைவிட அதிகமாக வசூலித்த பணத்தை பயணிகளுக்கு திருப்பிக் கொடுக்க உரிமையாளர்களுக்கு உத்தரவிட்டார். மேலும் அதிக கட்டணம் வசூல் செய்யப்பட்டால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *