• Fri. Mar 27th, 2026
WhatsAppImage2026-03-25at0556534
previous arrow
next arrow
Read Now

தேர்தல் பிரச்சார பாடல்களுக்கு நடனமாடி விழிப்புணர்வு ஏற்படுத்திய திருநங்கைகள்..,

BySubeshchandrabose

Mar 27, 2026

தமிழகத்தில் வருகிற 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது

இந்த நிலையில் தேனி மாவட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் தவறாமல் வாக்கு செலுத்தி 100% வாக்குப்பதிவை வலியுறுத்தும் விதமாக மாவட்ட நிர்வாகத்தால் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக இன்று தேனி – அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட வள்ளி நகர் பகுதியில் திருநங்கைகள் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

தேனி மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் திருநங்கைகள் அனைவரும் தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி உறுதிமொழி ஏற்கப்பட்டு அவர்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

முன்னதாக திருநங்கைகள் தற்போது 100 சதவீத வாக்குகளை பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி தேர்தல் பிரச்சார பாடல்களுக்கு திருநங்கைகள் நடனமாடி விழிப்புணர்வு ஏற்படுத்தியது அனைவரையும் கவரும் வகையில் அமைந்தது.