• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வின்றி இடமாறுதல் கவுன்சிலிங்..!

Byவிஷா

May 13, 2023

தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு இன்றி இடம் மாறுதல் கவுன்சிலிங் நடத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு வரும் கல்வி ஆண்டுக்கான இடமாறுதல் கவுன்சிலிங் மே 8ஆம் தேதி தொடங்குவதாக இருந்த நிலையில் சில நிர்வாக காரணங்களால் அது தள்ளி வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வருகின்ற மே 15ம் தேதி முதல் 26ம் தேதி வரை ஆசிரியர்கள் இடமாறுதல் கவுன்சிலிங் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதில் இடைநிலை ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர் என்றும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுநிலை என்றும் பதவி உயர்வு வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய பதவி நிலையில் கவுன்சிலிங் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். எனவே உபரியாக உள்ள பணியாளர்களையும் இடம் மாறுதல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.