• Fri. Jan 24th, 2025

மூன்று மாவட்டத்திற்கான காவல் துறையினருக்கு பயிற்சி

BySeenu

Dec 4, 2024

தமிழ்நாடு காவல் துறையின் பணிபுரிய உள்ள காவலர்கள். கோவை பி.ஆர்.எஸ் பள்ளியில் பயிற்சி !!!

கோவை அவிநாசி சாலையில் உள்ள பி.ஆர்.எஸ் காவலர் பயிற்சி பள்ளியில் மூன்று மாவட்டத்திற்கான காவல் துறையினருக்கு பயிற்சி இன்று முதல் தொடங்கி உள்ளது. இதில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த 97 பேருக்கும், கரூர் மாவட்டத்தை சேர்ந்த 9 பேருக்கும், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 74 பேர் என 180 இந்த பயிற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.

மேலும் அவர்களுக்கு கவாத்து கராத்தே, நீச்சல், சட்டம் பயிற்சி, IPC, CRPC, துப்பாக்கி சூடுதல், எப்படி துப்பாக்கி கையாள்வது, துப்பாக்கி சுருவது, ஒரு கூட்டத்தை எவ்வாறு கட்டுப்படுவது உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை வழங்கி இருக்கின்றனர்.

அதனைத் தொடர்ந்து ஏழு மாதம் பயிற்சியும் மற்றும் ஒரு மாதம் செய்முறை பயிற்சி என 8 மாதம் பயிற்சிகள் பயிற்சி காவலர்களுக்கு அளிக்க உள்ளனர்.

அதனைத் தொடர்ந்து லோக்கல் பட்டாலியன் பயிற்சிகள் அளிக்கப்பட்டு எட்டு மாதம் பயிற்சிக்கு பிறகு பரைட் அணிவகுப்புடன் பயிற்சி நிறைவடைந்து சென்று விடுவார்கள்.