விராலிமலையில் பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு பயிற்சி கூட்டம் முன்னாள் அமைச்சர் டாக்டர்.சிவிஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது.

அஇஅதிமுக பொதுச்செயலாளர் சட்டமன்ற எதிக்க்கட்சி தலைவர் எடப்பாடியார் ஆணைக்கிணங்க புதுக்கோட்டை வடக்கு மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதி விராலிமலை நகரம் கழகம் சார்பில் பூத் நிர்வாகிகளுக்கு எதிர்வரும் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் அண்ணாதிமுக சார்பில் அமைக்கப்பெற்ற பூத் கமிட்டி நிர்வாகிகளுகு பயிற்சி அளிக்கும் வகையில் பயிற்சி முகாம் விராலிமலையில் உள்ள CVB திருமண மஹாலில் முன்னாள் அமைச்சர், மாவட்ட கழக செயலாளர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் புதுக்கோட்டை வடக்கு மாவட்டத்திற்கு பொறுப்பாளர்களாக அறிவிக்கப்படுள்ள அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த தகவல் தொழில்நுட்ப பிரிவை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் மற்றும் ராகுல் ஆகியோர் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
பின்னர் மாற்றுகட்சியில் இருந்து விலகி நூற்றுக்கு மேற்பட்ட இளைஞர்கள் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் முன்னிலையில் அஇஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியார் தலைமையேற்று அண்ணா திமுக வில் இணைந்தனர்.

இந்த நிகழ்வில் மாவட்ட அவைத்தலைவர் ராமசாமி, ஒன்றிய செயலாளர்கள் பழணியான்டி, நாகராஜ், திருமூர்த்தி, விராலிமலை நகரம் செந்தில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் நார்த்தாமலை ஆறுமுகம், நெடுஞ்செழியன், மாநில நிர்வாகிகள் தர்ம தங்கவேல், MTR.தமிழரசன், பாறை சிவா, திருச்சி மண்டல தகவல் தொழில்நுட்ப செயலாளர் மணிகண்டன், மாவட்ட அணி செயலாளர்கள் பழனிவேல், முகமது இப்ராஹிம், அன்னலட்சுமி, ராஜா மரியதாஸ், IT WING ரஞ்சித்குமார், இலக்கிய அணி முத்துக்குமார் மற்றும் விராலிமலை ஒன்றிய கழக நிர்வாகிகள் சிவசாமி, வெல்கம் மோகன், தீபன், அய்யப்பன், ராஜா, சுரேஷ், கோனார் முருகேஷ், வேலுமணி, SMJ.முனியன், MMS.முரளி, நிருபர் முரளி, அஜித் குமார், SETC ஐயப்பன், வீரமணி, கல்குடி ஐயப்பன், பார்த்தசாரதி, கனகு, பூதகுடி விக்னேஷ், பிரபாகரன், கோபி ராகவன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பூத் கமிட்டி நிர்வாகிகள் 500க்கு மேற்பட்டோர் பங்கேற்றனர்.