சிவகங்கையில் திருடு போன செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக சுமார் 9.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான 52 விலை உயர்ந்த செல்போன்கள் திருடு போனதாக காவல் நிலையங்களில் வழக்கு பதிவுசெய்யபட்டது. தொடர் திருட்டு சம்பவங்களால் உஷாரான காவல்துறையினர் செல்போன் திருடர்களை தேடும் முயற்சியில் தீவிரமாக இறங்கினர். திருட்டு செல்போன்களின் டவர் சிக்னல்களை வைத்து, 52 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றை இன்று அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது . இந்த நிகழ்வில் கலந்து கொண்ட கண்காணிப்பாளர் செந்தில்குமார் அதனை உரிமையாளர்களிடம் உரிய முறையில் ஒப்படைத்தார்.