பாம்பனில் ரயில் செங்குத்து தூக்கு பாலம் மற்றும் பழைய தூக்கு பாலத்தை ஏற்றி, இறக்கி ரயில், கப்பலை இயக்கி சோதனை நடைபெற்றது.
ராமேஸ்வரம் அடுத்த பாம்பனில் சுமார் 550 கோடி மதிப்பீட்டில் புதிய செங்குத்து தூக்குப்பாலம் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் தற்போது அதன் பணிகள் நிறைவடைந்துள்ளது.
இதனை அடுத்து வருகின்ற ஏப்ரல் 6- ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி ராமேஸ்வரத்திற்கு வருகை தந்து, பாம்பன் பாலத்தை திறந்து வைத்து ராமேஸ்வரத்திற்கு ரயில் சேவையை அர்ப்பணிக்க உள்ளார்.
இந்த நிலையில் சிறப்பு பாதுகாப்பு குழு அதிகாரிகள் பாம்பன் புதிய செங்குத்து தூக்கு பாலத்தை ஏற்றி இறக்கியும், பழைய தூக்கு பாலத்தை ஏற்றி இறக்கியும் அதன் வழியாக ரயிலையும், கப்பலையும் இயக்கி சோதனை நடத்தினர்.
மேலும் இதனை ராமேஸ்வரத்துக்கு வந்திருந்த ஏராளமான சுற்றுலா பயணிகளும் பார்வையிட்டு சென்றனர்.