• Sat. Dec 20th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

கோர விபத்து : சரக்கு ரயில் மோதி தொழிலாளி பலி

By

Sep 6, 2021 ,

அரக்கோணம் புதுபேட்டையை சேர்ந்தவர் வெங்கடேசன் .கூலி தொழிலாளியான இவர் நேற்று காலை அரக்கோணம் – திருத்தணி ரயில் மார்கத்தில் உள்ள மங்கமாபேட்டை ரயில்வே கேட்டைகடக்க முயன்றார். அப்போது ,ஆந்திர மாநிலத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த சரக்கு ரயில் அவர் மீது மோதியது. இதில் இரத்த வெள்ளத்தில் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த வந்த ரயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் , இச்சம்பவத்தை குறித்து ரயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக தெரிகிறது.