கரூர் நகரில் நம்பர் எழுதப்படாத இருசக்கர வாகனங்கள் அதிக அளவில் இயக்கப்படுவதாகவும், புகார் எழுந்தது. குற்றச் செயல்களை தடுப்பதற்காக கரூர் மாவட்டம் முழுவதும் போக்குவரத்து போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர்.

இன்று கரூர் பேருந்து நிலையம் அருகில் பதிவெண் எழுதப்படாத 50 க்கும் அதிகமான இருசக்கர வாகனங்களை போலீசார் மடக்கிப் பிடித்தனர். தொடர்ந்து அவர்களிடம் அடையாள அட்டையை உறுதி செய்து கொண்ட பிறகு அவர்களுக்கு தலா 500 அபராதம் விதித்தனார். வாகன ஓட்டிகள் உடனடியாக நம்பர் பிளேட் பொருத்தி வாகன பதிவு எண்ணை எழுதிக் கொண்ட பிறகு வாகனங்களை விடுவித்தனர்.
போக்குவரத்து போலீசாரின் இந்த பணிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா நேரில் ஆய்வு செய்தார். தொடர்ந்து மாவட்டம் முழுவதும் வாகன பதிவெண் எழுதாமல் இயக்கப்படும் வாகனங்களை பறிமுதல் செய்யவும் அவர் உத்தரவிட்டார்.
கரூர் நகர போக்குவரத்து போலீசார் இந்த நடவடிக்கையை எஸ்பி பெரோஸ்கான் அப்துல்லா பெரிதும் பாராட்டினார்.













; ?>)
; ?>)
; ?>)