தொடர் விடுமுறையால் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் 3-வது நாளாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் ஆயுத பூஜை, விஜயதசமி, காலாண்டு விடுமுறை என தொடர் விடுமுறையால் ஏராளமான சுற்றுலா பயணிகள் முகாமிட்டுள்ளனர்.

பயணிகளின் வருகையால் அப்சர்வேட்டரி, ஏரிச்சாலை, பாம்பார்புரம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் நீடித்தது. நகரின் பிரதான பகுதியில் இருந்து சுற்றுலா பகுதிகளுக்கு செல்ல பயணிகள் அவதியடைந்தனர். போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த சந்திப்பு பகுதியில் போலீசார் ஏராளமானோர் குவிக்கப்பட்டனர்.






