• Fri. Oct 17th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

பொறியியல் துறையின் Tractor Operator பயிற்சி:

ByN.Ravi

Oct 11, 2024

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் வேளாண்மை பொறியியல் துறையின் மூலமாக Tractor Operator பயிற்சி வழங்கப்பட்டது.

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் வேளாண்மை பொறியியல் துறையின் மூலமாக Tractor Operator பயிற்சி மதுரை மாவட்டம், நெல்லியேந்தல்பட்டி (விவசாய கல்லூரிக்கு) அருகில் உள்ள உதவி செயற்பொறியாளர் (வேளாண்மை பொறியியல்), அரசு இயந்திர கலப்பை பணிமனையில் நடத்திட சென்னை தலைமைப் பொறியாளர் (வேளாண்மை பொறியியல் துறை) அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
மேற்காணும் Tractor Operator பயிற்சி 22 நாட்களுக்கு ஒரு பயிற்சி வகுப்புக்கு 25 நபர்கள் வீதம் மொத்தம் 3 பயிற்சி வகுப்புகள் நடைபெற இருக்கிறது. மேலும், இப்பயிற்சியானது
மதுரை மாவட்டம், நெல்லியேந்தல்பட்டி (விவசாய கல்லூரிக்கு) அருகில் உள்ள உதவி செயற்பொறியாளர் (வேளாண்மை பொறியியல் துறை) அரசு இயந்திர கலப்பை பணிமனையில் நடைபெறவுள்ளது. மேற்காணும் பயிற்சி வகுப்புகளில் கலந்து
கொள்வதற்கு குறைந்தபட்ச கல்வித்தகுதி 10-ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் வயது வரம்பு 18 முதல் 45 வயது வரை ஆகும்.
மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை
மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டும் மேற்காணும் பயிற்சியில் கலந்து கொள்ள
கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேற்காணும் பயிற்சியில், கலந்து கொள்ள தகுதியுள்ள நபர்கள் தங்களது கல்வித்தகுதி
சான்று, ஆதர் அட்டை மற்றும் புகைப்படம் ஆகியவற்றை மதுரை மாவட்டம், நெல்லியேந்தல்பட்டி (விவசாய கல்லூரிக்கு) அருகில் உள்ள உதவி செயற்பொறியாளர் (வேளாண்மை பொறியியல் துறை), அரசு இயந்திர கலப்பை பணிமனைக்கு நேரில் சென்று தங்கள் பெயரினை பயிற்சிக்கு, பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்
கொள்ளப்படுகிறது.
மேலும், கூடுதல் விபரங்களுக்கு (94436 77046, 82202 59705, 84289 81436) ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. பயிற்சி முடித்த பின் ஒட்டுநர் உரிமம் பெற ஆவண செய்யப்படும்.