முத்தூட் பைனான்ஸ் சமூக பொறுப்பு திட்டம் மூலம் டிராக்டர் மற்றும் தண்ணீர் வண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
முத்தூட் பைனான்ஸ் தங்களது CSR திட்டம் மூலம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது. குறிப்பாக சுகாதார மேம்பாடு, கல்வி மற்றும் சுற்றுசூழல்.
இதனை தொடர்ந்து மதுரை வன சரகத்திருக்கு முத்தூட் பைனான்ஸ் சமூக பொறுப்பு திட்டம் மூலம் சுமார் Rs.9,14,000/- மதிப்புள்ள டிராக்டர் மற்றும் தண்ணீர் வண்டி வழங்கும் விழா நடைபெற்றது.
டிராக்டர் வழங்கும் நிகழ்ச்சியை மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா IAS. துவக்கி வைத்தார். மாவட்ட வன அலுவலர் T.தருண்குமார், IFS டிராக்டர் வாகனத்தை பெற்றுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வன கண்காணீப்பாளர் S. ஜெயராம், மாவட்ட வனசரகர் சிக்கந்தர் பாட்சா, சமூக வனதிட்ட வன சரகர் காந்தன், வன சரகர் பாஸ்கர பாண்டியன், சமூக வனதிட்ட வன சரகர் சங்கர், வன காப்பாளர் ராஜேஷ் குமார், முத்தூட் மதுரை மண்டல மேலாளர் அருண்குமார், CSR மேனேஜர் ஜெயக்குமார், மார்க்கெட்டிங் கார்த்திக், முத்தூட் அலுவலர்கள் ஹரிஷ், ரத்னகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் பொது மக்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.