திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகே இருசக்கர வாகனத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்து பேரூராட்சி மேற்பார்வையாளர் பலியானார். திண்டுக்கல் அண்ணாமலையார்மில்ஸ் காலனியை சேர்ந்த ஞானபிரகாசம் மகன் ஜெரால்ட்பிரிட்டோ(49). இவர் தாடிக்கொம்பு பேரூராட்சியில் பணி மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில் தாடிக்கொம்பு to மாரம்பாடி சாலையில் திருகம்பட்டி பிரிவு அருகே இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார் . சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்த வேடசந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் வேலாயுதம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜெரால்ட்பிரிட்டோவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.