விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் 39, 41, 27, 22,12, 8, 3 ஆகிய வார்டு பகுதிகள் மற்றும் பொதுமக்கள் அதிகமாக வந்து செல்லக்கூடிய மாயூர்நாதர் சாமி கோவில் அருகே தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார் தொகுதி நிதியில் இருந்து 33 லட்சம் மதிப்பிலான உயர் கோபுர மின்விளக்குகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார் இராஜபாளைய சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் இராஜபாளையம் நகர் மன்ற தலைவி பவித்ரா ஷ்யாம் மற்றும் இராஜபாளையம் தெற்கு நகர செயலாளர் பேங்க் ராம்மூர்த்தி ஆகியோர் திறந்து வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் நகர் மன்ற உறுப்பினர்கள் சுமதி ராமமூர்த்தி .ரோகிணி நாகேஸ்வரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பாராளுமன்ற உறுப்பினர் நிதியில் திறக்கப்பட்ட உயர் கோபுரம் மின்விளக்கு கல்வெட்டில் சட்டமன்ற உறுப்பினர் பெயர் போடாததால் கல்வெட்டுகள் திறக்கப்படாமல் மூடப்பட்டிருந்தது.
