• Fri. Nov 21st, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

ஊட்டி மலைரயிலில் பயணிக்க ஆர்வம் காட்டும் சுற்றுலா பயணிகள்..!

Byவிஷா

May 16, 2022

நீலகிரியில் தற்போது காணப்படும் குளிர்ந்த கால நிலையில் மலை ரயிலில் பயணித்தவாறு இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் இயக்கப்படும் மலை ரயில் உலக பிரசித்தி பெற்றதாகும். இந்த மலை ரயில் ஆங்கிலேயரால் 1899 ஆம் ஆண்டு மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரை இயக்கப்பட்டது. ஆசியாவிலேயே 22 கிலோ மீட்டர் மலைப்பாதையில் பல்சக்கரங்களைக் கொண்டு இயக்கப்படும் ஒரே மலையில் என்ற பெருமையுடையது. இந்த மலை ரயிலில் மலைப்பாதையில் பயணிப்பது என்பது ஒரு சுகமான அனுபவமாகும். இந்த மலை ரயிலில் பயணிக்க உள்ளூர் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் அதிக அளவு ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது நீலகிரியில் நிலவும் ரம்யமான குளிர்ந்த கால நிலையினை, மலை ரயிலில் பயணித்தவாறு இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.