• Fri. Dec 12th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

மாமல்லபுரத்தில் இன்று சுற்றுலா பயணிகள் சுற்றிப்பார்க்க ஃப்ரீ .. ஃப்ரீ ..

Byகாயத்ரி

Mar 8, 2022

மகளிர் தினத்தை முன்னிட்டு மாமல்லபுரத்தில் இன்று சுற்றுலா பயணிகள் புராதான சின்னங்களை இலவசமாக கண்டுகளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் பெண்களின் மகத்தான சாதனைகளை போற்றும் வகையில் சர்வதேச அளவில் மார்ச் 8ஆம் தேதி பெண்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. அந்தவகையில் இன்று பெண்கள் தினத்தை முன்னிட்டு அரசு சார்பிலும், தனியார் அமைப்புகள் சார்பிலும் பல இடங்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில் தமிழகத்தின் மிக முக்கிய மற்றும் வரலாற்று சிறப்பு வாய்ந்த சுற்றுலாத்தலங்களில் ஒன்றான மாமல்லபுரத்தில் இன்று பெண்கள் தினத்தை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் புராதான சின்னங்களை கட்டணமின்றி இலவசமாக கண்டுகளிக்கலாம் என தொல்லியல் துறை அறிவித்துள்ளது.அதன்படி வெண்ணை உருண்டை பாறை, அர்ஜுனன் தபசு, ஐந்து ரதம் கடற்கரை கோவில் உள்ளிட்ட பிரதான சின்னங்களை இன்று காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை நுழைவு கட்டணம் இன்றி பெண்கள் இலவசமாக கண்டு ரசிக்கலாம். மாமல்லபுரத்தில் வழக்கமாக உள்நாட்டு பயணிகளுக்கு 400 ரூபாயும்,வெளிநாட்டு பயணிகளுக்கு 600 ரூபாயும் கட்டணமாக வசூலிப்பது குறிப்பிடத்தக்கதாகும்.