• Tue. Apr 16th, 2024

ஜெயலலிதா மரணம் குறித்து ஓபிஎஸ்ஸிடம் விரைவில் விசாரணை

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி காலமானார். இவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக பலர் கருத்துகளை தெரிவித்தனர்.

இதனால், கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆறுமுகசாமி ஆணையத்தை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான விசாரணை கடந்த 3 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த நிலையில், நேற்று முதல் ஆறுமுகசாமி ஆணையம் மீண்டும் விசாரணை தொடங்கியுள்ளது.

இந்நிலையில், ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான விசாரணையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்துக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையம் முடிவு செய்துள்ளது. வரும் 15-ஆம் தேதிக்கு பின்னர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு சம்மன் அனுப்ப ஆறுமுகசாமி ஆணையம் திட்டமிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *