• Tue. Dec 16th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

ஊட்டியிலிருந்து கூடலூர் நோக்கி சென்ற சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து 13 பேர் காயம்

மேல் கூடலூர் பகுதியில் ஊட்டியில் இருந்து கூடலூர் நோக்கி சென்ற சுற்றுலா வேன் சாலையில் கவிழ்ந்து விபத்து 13 பேர் காயம். அவர்கள் சிகிச்சைக்காக கூடலூர் அரசு மருத்துவமனை யில் அனுமதி
திருப்பூர் மாவட்டத்தில் இருந்து கூடலூர் உட்பட்டியில் ஒரு விழாவில் கலந்து கொள்ள 22 வட இந்திய நபர்கள் ஒரு சுற்றுலா வேணில் ஊட்டியில் இருந்து கூடலூர் சாலையில் பயணம் செய்த போது மேல் கூடலூர் பகுதியில் நிலை தடுமாறி வேன் சாலையில் கவிழ்ந்தது,


தகவல் அறிந்த கூடலூர் காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து காயமடைந்த 13 பேரை காயங்களுடன் மீட்டு கூடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்,
மீதமுள்ள நபர்கள் வெளி நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டனர் இதனால் ஊட்டி கூடலூர் சாலையில் போக்குவரத்து தடைப்பட்டது சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றது பின்பு கிரேன் வரவழைக்கப்பட்டு கவிழ்ந்த வேனை அப்புரபடுத்தினர் காவல்துறையினர் இது குறித்து கூடலூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது