• Sun. Mar 22nd, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி :முதுமலையில் முன்கூட்டியே துவங்கிய யானை சவாரி :

By

Sep 5, 2021

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் சரணாலயத்தை சுற்றுலா பயணிகள் பார்வையிட கடந்த 2ஆம் தேதி தமிழக அரசு அனுமதித்துள்ளது . இதனிடையே,முதற்கட்டமாக வனப்பகுதிக்குள் வாகன சவாரி மேற்கொள்ளவும் , யானைகள் முகாமை பார்வையிடவும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

இந்நிலையில் யானைகள் சவாரி வரும் 6ஆம் தேதி துவங்கும் என வனத்துறை தரப்பில் அறிவித்துள்ளது. ஆனால், முதுமலைக்கு சுற்றுலா வந்த பலரும் யானை சவாரி செய்ய அதிகம் விருப்புவார்கள்.

இதனையடுத்து ஏற்கனவே அறிவித்த தேதியை விட முன்கூட்டியே சுற்றுலா பயணிகள் யானை சவாரி மேற்கொள்ள வனத்துறை அனுமதி அளித்தனர். அதன்படி முதுமலைக்கு வந்த சுற்றுலா பயணிகள் பலர் யானை சவாரி மேற்கொண்டு மகிழ்ந்தனர்.