• Tue. Apr 22nd, 2025

மணாலி நெடுஞ்சாலையில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து..,

சிம்லா: ஹிமாச்சல பிரதேசத்தில் சண்டிகர்-மணாலி தேசிய நெடுஞ்சாலையில் சுற்றுலாப் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 31 பேர் காயமடைந்துள்ளனர்.

குலு மாவட்டத்தில் உள்ள கசோலுக்கு சென்று கொண்டிருந்த பேருந்து இன்று அதிகாலை 4 மணியளவில் விபத்தில் சிக்கியது. ஓட்டுநர் மற்றும் நடத்துநர் உட்பட 31 பேர் காயமடைந்தனர். இதில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அவர்கள் நெர்ச்சோக் மருத்துவக் கல்லூரிக்கு மாற்றப்பட்டுள்ளனர். அதிக வேகமே விபத்துக்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.