• Thu. Nov 20th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

மதுரை தமுக்கம் மைதானம் ஆர்.பி.ஐ அரங்கத்தில்..,மே 31 வரை கிழிந்த ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்ளலாம்..!

Byவிஷா

May 18, 2023

மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெறும் பொருட்காட்சியில் அமைந்திருக்கும் ஆர்.பி.ஐ அரங்கத்தில், மே 31ஆம் தேதி வரை கிழந்த மற்றும் அழுக்கான ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நம்மிடம் இருக்கும் ரூபாய் நோட்டு ரொம்ப பழையதாக எப்போது கிழியப்போகிறது என்ற அளவிற்கு இருக்கும் நோட்டுக்களை சாலிட் நோட் என்று கூறுவார்கள். இந்த நோட்டுகளை நேரடியாக வங்கிக்கு சென்று கொடுத்தால் மாற்றி அதற்கு ஈடாக பணத்தை வாங்கிக் கொள்ளலாம். அதே போல அல்லது ரூபாய் நோட்டின் ஓரம் கிழிந்திருந்தாலோ, டேப் போட்டிருந்தாலோ அல்லது இரண்டு இடத்தில் கிழிந்து இருந்தாலோ அதை மல்டிலேட்டட் நோட் என்று அதை வங்கியில் கொண்டு கொடுத்தால் அவர்கள் அதற்கான பணத்தை கொடுத்து விடுவார்கள். அவர்கள் அந்த பணத்தை செஸ்ட் வங்கியில் கொடுத்து மாற்றி விடுவார்கள்.
இந்நிலையில் மதுரை தமுக்கம் மைதானத்தில் நடக்கும் பொருட்காட்சியில் ஆர்.பி.ஐ அரங்கம் ஒன்று உள்ளது. அதில் பழைய கிழிந்த அழுக்கான ரூபாய் நோட்டுக்களை மாற்றி புதிய நோட்டுகள் தருகிறார்கள். இந்த அரிய வாய்ப்பை அனைவரும் பயன்படுத்தி தங்களது பழைய கிழிந்த அழுக்கான ரூபாய் நோட்டுக்களை மாற்றி கொள்ளலாம். இந்த வாய்ப்பு மே 31ஆம் தேதி வரை மட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தினமும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை சென்று மாற்றி கொள்ளலாம்.