• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மாநில வினாடி-வினா போட்டிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்..!

Byவிஷா

Jan 18, 2024

14வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, மாநில அளவிலான வினாடி-வினா போட்டிக்கு நாளைக்குள் (ஜனவரி 19) விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வாக்காளர்கள் தேர்தல் நடைமுறைகளில் பங்கேற்பதை ஊக்குவிக்கும் விதமாக 14வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு மாநில அளவிலான வினாடி வினா போட்டி ஜனவரி 21ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தியாவின் தேர்தல்கள் என்ற தலைப்பில் நடைபெறும் இந்த போட்டியில் பொதுமக்கள் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் ஜனவரி 19ஆம் தேதிக்குள் பெயர் மற்றும் விவரங்களை http://www.erolls.gov.in/Quiz2024 என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
அதிலும் குறிப்பாக பங்கேற்பாளரின் கைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி கட்டாயம் இடம் பெற்றிருக்க வேண்டும். இது குறித்த கூடுதல் தகவல்களுக்கு 180042521950 என்ற மாநில உதவி மைய எண்ணிலும் 1950 என்ற மாவட்ட உதவி மைய எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.