• Thu. Mar 19th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

நாளை மறுநாள் முதல் பொங்கல் பரிசுக்கான டோக்கன்

ByA.Tamilselvan

Dec 25, 2022

பொங்கல் பரிசுத்தொகுப்பை பெறுவதற்கான டோக்கன் பயனாளர்களின் வீடுகளுக்கே சென்று நாளை மறுநாள் முதல் விநியோகிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொங்கல் ரொக்கப் பணம் வழங்கும் நிகழ்ச்சியினை அடுத்த மாதம் வரும் ஜனவரி 2ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைக்கிறார். அதைதொடர்ந்து, அதேநாளில் அனைத்து மாவட்டங்களிலும் அமைச்சர்கள் பொங்கல் பரிசுத்தொகுப்பினை பொது மக்களுக்கு வழங்க உள்ளனர். அந்த வகையில், ரூ.1000-த்துடன் கூடிய பொங்கல் பரிசு தமிழகத்தில் உள்ள 33,000 ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்பட உள்ளது.
இதற்கான ஆயத்த பணிகள் நாளை முதல் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. அதைதொடர்ந்து, பரிசுப்பொருட்களை பெறுவதற்கான டோக்கனை, ரேஷன் கடை ஊழியர்களே வரும் 27ம் தேதி முதல் 28ம் தேதி வரை பயனாளர்களின் வீடுகளுக்கே சென்று விநியோகிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.