• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற இன்று தீர்மானம்!…

ByA.Tamilselvan

Jan 12, 2023

சேது சமுத்திர திட்டத்தை மத்திய அரசு உடனே நிறைவேற்ற வலியுறுத்தி சட்டப்பேரவையில் இன்று தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிகிறார்.
நடப்பு ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் கடந்த 9-ந்தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. கூட்டத்தின் முதல் நாளிலேயே ஆளுநர் ஆர்.என்.ரவி உரையால் பல பரபரப்பு காட்சிகள் அரங்கேறின. இந்த நிலையில் இன்று சேது சமுத்திர திட்டத்தை மத்திய அரசு உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி சட்டப்பேரவையில் அரசினர் தனித்தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வருகிறார். 2004-ல் அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தை இனியும் காலம் தாழ்த்தாமல் நிறைவேற்ற வேண்டும் அதுதான் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உகந்ததாக இருக்கும். சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றாமல் இருப்பது தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுகிறது என்பதால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த தீர்மானத்தை சட்டப்பேரவையில் முன்மொழிகிறார்.