• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்வு

Byவிஷா

May 15, 2024

சென்னையில் இன்று காலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு 35 ரூபாய் உயர்ந்து, ரூ.6,725க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு ரூ.285 உயர்ந்து, ரூ.53,800க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தை அதிகம் வாங்க காரணம், அவசரத்திற்கு அடகு வைத்து பணத்தை புரட்ட முடியும். தங்கம் இருந்தால் தைரியமாக தொழில் தொடங்கலாம். வீடு கட்டலாம். தங்கத்தின் மீதான கடன் வட்டி மிகவும் குறைவு. எனவே மக்கள் தங்கத்தை முதலீடாகவும், வாழ்க்கையின் அங்கமாகும் பார்க்கிறார்கள். கடந்த சில நாட்களாக குறைந்த தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.
அதன்படி, சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 280 ரூபாய் குறைந்து விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 35 ரூபாய் உயர்ந்து, ரூ.6,725-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு 280 ரூபாய் உயர்ந்து, ரூ.53,800-க்கு விற்பனையாகிறது.
அதேபோல், நேற்று 18 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.5,480-க்கு விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (18 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 29 ரூபாய் உயர்ந்து, ரூ.5,509-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 90,700 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 300 ரூபாய் உயர்ந்து, ரூ.91,000-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.91.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது.