• Wed. Mar 18th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

இன்று தென் மாநில முதலமைச்சர்கள் கூட்டம்

ByA.Tamilselvan

Sep 3, 2022

கேரள மாநில திருவனந்தபுரத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா தலைமையில் தென்மாநில முதலமைச்சர்கள் கூட்டம் நடைபெறுகிறது.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகம், ஆந்திரா, தெலுங்கானா ஆகிய 6மாநிலங்கள் தென் மண்டல கவுன்சிலில் அங்கம் வகிக்கின்றன. இந்த தென் மண்டல கவுன்சிலில் இடம் பெற்றுள்ள தென் மாநிலங்களின் முதலமைச்சர்கள் கூட்டம், கேரள மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்தில் இன்று நடக்கிறது. இந்த கூட்டத்துக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமை தாங்குகிறார்.
கூட்டத்தில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்துகொள்கிறார்கள். மேலும், பிற தென் மாநில முதல்-மந்திரிகளான பினராயி விஜயன் (கேரளா), பசவராஜ் பொம்மை (கர்நாடகம்), ஜெகன்மோகன் ரெட்டி (ஆந்திரா), சந்திரசேகரராவ் (தெலுங்கானா) ஆகியோரும், மூத்த மந்திரிகளும், தலைமைச்செயலாளர்களும், முதன்மைச் செயலாளர்களும், மத்திய அரசின் மூத்த அதிகாரிகளும் கலந்து கொள்வார்கள் என மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.