• Wed. Apr 23rd, 2025

இன்று 10ம் வகுப்பு பொது தேர்வு

BySeenu

Mar 28, 2025

கோவையில் எஸ்.எஸ்.எல்.சி பொது தேர்வு.. 175 தேர்வு மையங்களில் 39 ஆயிரத்து 433 மாணவர்கள் எழுதுகிறார்கள் !!!

கோவையில் 10 ம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று நடைபெறுகிறது. தேர்வை 39,433 மாணவர்கள் எழுதுகின்றனர். இதற்காக 175 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

மாநில பாடத் திட்டத்தின் கீழ் படிக்கும் பிளஸ் டூ மாணவ – மாணவிகளுக்கு கடந்த மூன்றாம் தேதி தொடங்கி 25 – ம் தேதி வரை பொது தேர்வு நடைபெற்றது. இதைத் தொடர்ந்து பிளஸ் ஒன் மாணவ – மாணவிகளுக்கு கடந்த 5 ம் தேதி முதல் பொது தேர்வு நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து 10 ஆம் வகுப்பு மாணவ – மாணவிகளுக்கான பொதுத் தேர்வு இன்று தொடங்கி நடைபெறுகிறது. அடுத்த மாதம் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நடக்க இருக்கிறது.

கோவை மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு 518 அரசு, அரசுஉதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 39,433 மாணவ – மாணவிகள் எழுதுகின்றனர். இதற்காக மாவட்டம் முழுவதும் 175 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த தேர்வானது காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் பிற்பகல் 1.15 மணி வரை நடக்கிறது.

முதல் 10 நிமிடம் கேள்வித்தாளை மாணவ – மாணவிகள் படிக்க வேண்டும். பின்னர் 5 நிமிடம் பதிவு எண் எழுத ஒதுக்கப்படுகிறது. பின்னர் 10.15 மணிக்கு தேர்வு தொடங்கி 1.15 மணி வரை மூன்று மணி நேரம் நடக்கிறது. முதல் நாளான இன்று தமிழ் மற்றும் இதர மொழி பாடங்களுக்கும், 2 ம் தேதி ஆங்கில பாடத்திற்கும், 4 ம் தேதி 3-வது மொழிப் பாடத்துக்கும், 7 ம் தேதி கணித பாடத்திற்கு, 11 ஆம் தேதி அறிவியல் பாடத்திற்கு, 15 ஆம் தேதி சமூக அறிவியல் பாடத்திற்கும் தேர்வு நடக்கிறது. பொதுத்தேர்வு நடைபெறும் தேர்வு மையங்களுக்கு மின்வாரியம் சார்பில் தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மேலும் மாணவ – மாணவிகளுக்கு குடிநீர் வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. தேர்வு அறையில் உள்ள மேஜைகளில் மாணவ – மாணவிகளின் பதிவு எண்களை எழுதப்பட்டு உள்ளது. பொதுத்தேர்வில் மாணவ – மாணவிகள் காப்பி அடிப்பதை தடுக்க பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. தேர்வை கண்காணிக்கும் பணியில் 500 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபட்ட ஈடுபடுத்தப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.