• Tue. Oct 7th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

இராமசுவாமி வெங்கட்ராமன் பிறந்த தினம் இன்று!

Byகாயத்ரி

Dec 4, 2021

இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப் பதவி வகித்தவர் இராமாசுவாமி வெங்கட்ராமன். 1910-ம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டைக்கு அருகிலுள்ள ராஜாமடம் என்னும் கிராமத்தில் பிறந்தார்.

தந்தை பெயர் இராமசாமி ஐயர். இவருக்கு ராஜாமடத்தில் ஒரு நெருங்ககிய நண்பர் இருந்தார் அவர் பெயர் ராஜாமடம் கண்ணன் ஐயங்கார் பட்டுக்கோட்டையில் முடித்த பின் திருச்சிராப்பள்ளியில் உள்ள தேசிய கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார்.

மேலும் உயர் படிப்பிற்காக சென்னை சென்றார். சென்னை பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முதுகலைப்படிப்பும் பின் சென்னை சட்ட கல்லூரியில் சட்ட படிப்பும் படித்தார். 1935-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்திலும் 1951-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்திலும் வழக்குரைநராக பதிவு செய்து கொண்டார். இந்திய அரசியலில் நெருக்கடியான காலகட்டம்.

இலங்கைச் சிக்கல், போபர்ஸ் ஊழல், ராஜீவ் காந்தி படுகொலை, பங்குசந்தை ஊழல் என பல்வேறு சிக்கல்களில் நாடு சிக்கியிருந்த ஐந்தாண்டுகளில் 4 பிரதமர்களுடன் பணியாற்றியவர் இவர். பாக்கிஸ்த்தானுக்கு பயணம் செய்த முதல் இந்தியக் குடியரசுத் தலைவர். அதற்கு முன் நான்கு ஆண்டுகள் துணைக் குடியரசுத் தலைவராக இருந்தார்.

இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்தவர். பல அமைச்சர் பதவிகளையும் வகித்து இருக்கின்றார். இவர் சென்னை பிராந்திய பார் பெடரேசனின் செயலாளர். 1942இல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது வேலூரில் 2 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவர். தமிழக காங்கிரஸ் கமிட்டியில் தொழிலாளர் பிரிவை உருவாக்கி, தொழிற்சங்க நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு பல்வேறு தொழிற்சங்கங்களை உருவாக்கியவர்.இத்தகைய அரும்பாடு பட்ட இராமசுவாமி வெங்கட்ராமன் பிறந்த தினம் இன்று!