• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

இன்று குழந்தைகள் தினம் : தவெக தலைவர் விஜய் வாழ்த்து

Byவிஷா

Nov 14, 2024

இன்று (நவ.14) குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, நடிகரும், தவெக தலைவருமான விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் குழந்தைகளுக்கு தெரிவித்துள்ள வாழ்த்தில் கூறியிருப்பதாவது..,
ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமானது. அவர்களின் புன்னகை விலைமதிப்பற்றது. குழந்தைகளின் மனம் பொறாமை, பழிவாங்குதல், ஏமாற்றுதல் போன்ற எந்த ஒரு தீய எண்ணத்தையும் கொண்டிராமல் தெளிந்த நீரை போல் பரிசுத்தமானது.
நமது எதிர்காலமான மழலைச் செல்வங்களுக்கு அடிப்படை உரிமைகளுடன் கூடிய சிறந்த சுதந்திரமான எதிர்காலத்தை உருவாக்கிட இந்த குழந்தைகள் தினத்தில் உறுதி ஏற்போம். குழந்தைகளை எந்நாளும் பாதுகாத்து போற்றி மகிழ்வோம். இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள் என தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.