• Mon. Apr 13th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

நீட் தேர்வு கலந்தாய்வை விரைந்து நடத்திட இன்று ஒருநாள் வேலை நிறுத்த போராட்டம்

2021 முதுகலை மருத்துவ மேற் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நீட் தேர்வு கலந்தாய்வை விரைந்து நடத்திட வலியுறுத்தி கன்னியாகுமரி முதுநிலை பயிற்சி மருத்துவர்கள் சங்கம் சார்பில் 50க்கும் மேற்பட்ட அரசு பயிற்சி மருத்துவர்கள் இன்று ஒருநாள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர்.

மருத்துவ மேற்படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நீட் தேர்வு முறைப்படி நடத்தப்பட்டு அதன் முடிவுகளின் அடிப்படையில் கலந்தாய்வு மூலம் நடைபெறும் அந்த வகையில் இந்த ஆண்டிற்கான முதுகலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு கொரோனா பரவல் காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்றது. இதன் முடிவுகள்
செப்டம்பர் மாதம் 26 ஆம் தேதி வெளியானது.

இந்நிலையில் இடஒதுக்கீடு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இருப்பதால் மாணவர் சேர்க்கை என்பது கால தாமதம் ஏற்பட்டு வருகிறது, இதனால் தற்போது அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் பணி புரிந்து வரும் பயிற்சி மாணவர்களுக்கு பணி சுமை ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு மத்திய அரசு மாணவர் சேர்க்கை நீட் தேர்வு கலந்தாய்வை விரைந்து நடத்திட வலியுறுத்தி நாடு முழுவதும் பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக இன்று கன்னியாகுமரி முதுநிலை பயிற்சி மருத்துவர்கள் சங்கம் சார்பில் 50 க்கும் மேற்பட்ட அரசு பயிற்சி மருத்துவர்கள் இன்று ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தங்கள் கோரிக்கைகள் அடங்கிய பதாகைகள் ஏந்தி பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.