• Fri. Apr 19th, 2024

அங்கன்வாடி உதவியாளர்களுக்கு ஓய்வுபெறும் வயது 60 ஆக உயர்த்தி அரசாணை வெளியீடு

Byகாயத்ரி

Dec 3, 2021

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் உள்ள குழந்தைகள் மையங்களில் பணிபுரியும் அங்கன்வாடி உதவியாளர்கள் பயன்பெறும் வண்ணம், அவர்களின் ஓய்வுபெறும் வயதை 58-ல் இருந்து 60 ஆக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: ‘தமிழ்நாடு சட்டசபையில் அவை விதி எண் 110-ன் கீழ் 7.9.2021 அன்று, ‘சத்துணவு மையங்களில் பணிபுரியும் சமையலர்கள் மற்றும் சமையல் உதவியாளர்கள் ஓய்வுபெறும் வயது 58-ல் இருந்து 60 ஆக உயர்த்தப்படும்’ என்று முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டார்.

அதை செயல்படுத்தும் விதமாக, சத்துணவு மையங்களில் பணிபுரியும் சமையலர்கள் மற்றும் சமையல் உதவியாளர்கள் ஓய்வுபெறும் வயது 58-ல் இருந்து 60 ஆக உயர்த்தி ஏற்கனவே அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பணியாளர்கள் பயன்பெற்று வருவதைப் போல் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் உள்ள குழந்தைகள் மையங்களில் பணிபுரியும் அங்கன்வாடி உதவியாளர்கள் பயன்பெறும் வண்ணம், அவர்களின் ஓய்வுபெறும் வயதை 58-ல் இருந்து 60 ஆக உயர்த்தி ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இதனால், 40 ஆயிரத்து 601 அங்கன்வாடி உதவியாளர்கள் பயனடைவர்’ என அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *