• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

இன்று மாசி மகத்தை முன்னிட்டு தஞ்சை, புதுச்சேரியில் உள்ளூர் விடுமுறை

Byவிஷா

Feb 24, 2024

இன்று மாசி மாதத்தின் மகம் நட்சத்திர தினம் என்பதால் மாசிமகம் திருவிழாவை பக்தர்கள் கொண்டாடி வரும் நிலையில், மாசி மகத்தை முன்னிட்டு புதுச்சேரி, காரைக்கால் பகுதிகள் முழுவதும் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று மாசி மகம் கொண்டாடப்படுகிறது. தமிழகம் மட்டுமல்லாமல், புதுவையிலும் மாசி மகத்தை பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்து கொண்டாடி வருகின்றனர். இதன் காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகள் முழுவதும் அரசு அலுவலகங்கள் பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து புதுச்சேரி அரசு செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மாசிமகம் திருவிழா கொண்டாடப்பட இருப்பதால் இன்று பிப்ரவரி 24ம் தேதி அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை புதுச்சேரி பள்ளி கல்வித்துறை உறுதி செய்துள்ளது.
அதே போல், கும்பகோணத்தில் மகாமக குளத்திற்கு பக்தர்கள் நீராட வருவார்கள் என்பதால் மாசிமகத்தை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.