• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

அமெரிக்காவின் தூதரக உயர் பதவிக்கு
இந்திய-அமெரிக்கர் நியமனம்: அதிபர் பைடன்

அமெரிக்காவின் வெளியுறவு துறை துணை அமைச்சர் பதவிக்கு இந்திய-அமெரிக்கரான ரிச்சர்டு ஆர்.வர்மாவை அதிபர் பைடன் நியமனம் செய்துள்ளார்.
அமெரிக்காவின் வெள்ளை மாளிகை வெளியிட்டு உள்ள செய்தியில், அமெரிக்காவின் வெளியுறவு துறை மேலாண்மை மற்றும் வளங்களுக்கான துணை அமைச்சராக இந்திய-அமெரிக்கரான ரிச்சர்டு ஆர்.வர்மாவை அதிபர் பைடன் நியமனம் செய்துள்ளார் என தெரிவித்து உள்ளது. முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா நிர்வாகத்தின்போது, இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர் அவர். சட்டமன்ற விவகாரங்களுக்கான வெளியுறவு துறை உதவி அமைச்சராகவும் பணியாற்றி உள்ளார். அமெரிக்க உறுப்பினரான ஹாரி ரீட்டுக்கு தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்ததுடன், அமெரிக்க செனட் சபையின் சிறுபான்மை தலைவராகவும் அவர் இருந்துள்ளார். அதிபரின் நுண்ணுறிவு ஆலோசக வாரியத்திற்கு நியமிக்கப்பட்டதுடன், பேரழிவுக்கான ஆயுதங்கள் மற்றும் பயங்கரவாத ஆணையத்தின் முன்னாள் உறுப்பினராகவும் நியமனம் செய்யப்பட்டவர். கடந்த காலங்களில் பல்வேறு விருதுகளையும் அவர் வாங்கி குவித்துள்ளார்.