• Thu. Nov 13th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

விளையாட்டு திடல் சீரமைக்கும் பணியை துவங்கி வைக்க..,ஆட்டோ ஓட்டிச் சென்ற கன்னியாகுமரி எம்.பி விஜய் வசந்த்..!

கன்னியாகுமரி மாவட்டம், மணக்குடி கிராமத்தில் உள்ள விளையாட்டு திடலை தனது சொந்த செலவில் சீரமைக்கும் பணியை தொடங்கி வைப்பதற்காக, கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.விஜய் வசந்த் ஆட்டோ ஓட்டிச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.

கன்னியாகுமரி மாவட்டம், மணக்குடி கிராம இளைஞர்கள் தங்களது நீண்ட நாள் கோரிக்கையாக, அந்த பகுதியில் உள்ள விளையாட்டு திடலை சீரமைத்து சமன் செய்து தர வேண்டும் என மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் அவர்களிடம் கோரிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில் தனது சொந்த செலவில் அந்த விளையாட்டு திடலை சீரமைத்து சமன் செய்யும் பணியினை கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுபினர் விஜய்வசந்த் இன்று துவக்கி வைத்தார்.

முன்னதாக மணக்குடி கிராமதிற்கு சென்ற எம்.பி. விஜய் வசந்த், ஜே.சி.பி இயந்திரம் மூலம் விளையாட்டு திடலை சீரமைக்கும் பணியைத் தொடங்கி வைக்க ஆட்டோ ஓட்டிச் சென்றது அங்கு இருக்கக்கூடிய பொதுமக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்த நிகழ்வின் போது கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.டி.உதயம், துணைத் தலைவர் லாரன்ஸ், வட்டார தலைவர்கள் அசோக் ராஜா, முருகேசன், அகத்தீஸ்வரம் பேரூராட்சித் தலைவர் கிங்ஸ்லின், மணக்குடி தலைவர் விக்டர் மணக்குடி தேவாலய பங்குத்தந்தை அரூள்ராஜ் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.