• Sat. Mar 7th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

ஊழல் வாதிகளாக இருக்காங்க.. நீதிபதி கருத்து… டிஜிபி சைலேந்திர பாபு கோரிக்கை…

Byகாயத்ரி

Apr 20, 2022

காவல் துறையில் அதிகாரிகள் ஊழல் வாதிகளாக இருப்பதாக தனி நீதிபதி தெரிவித்த கருத்துகளை நீக்கம் செய்து இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த வசந்தி என்பவர் நில விற்பனை தொடர்பாக நடேசன், ராஜவேலு போன்றோர் மீது மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளார். இதனை விசாரித்த போலீசார் தவறான புகார் என்ற புகாரை முடித்து நாமக்கல் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மறுவிசாரணை செய்ய உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த வில்லை என வசந்தி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த நிலையில் மறு விசாரணை நடத்தப்பட்டு சிவில் வழக்கு என்பதால் முடிக்கப்பட்டதாக காவல்துறை அதிகாரிகள் கூறியதை அடுத்து இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்து தனி நீதிபதி வேல்முருகன், தற்போது காவல்துறையில் 90 சதவிகித அதிகாரிகள் ஊழல் வாதிகளாகவும் திறமையற்றவர்களாகவும் இருப்பதாகவும், 10 சதவிகித அதிகாரிகள் மட்டுமே நேர்மையானவர்களும் திறமையானவர்களாகவும் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

ஊழல்வாதி அதிகாரிகளை களைந்து திறமையற்றவர்களுக்கு போதிய பயிற்சி வழங்க வேண்டிய நேரமிது எனவும் அவர் தனது உத்தரவில் குறிப்பிட்டிருக்கிறார். மேலும் தனி நீதிபதியின் இந்த கருத்துக்களை நீக்கக் கோரி தமிழக டிஜிபி சைலேந்திரபாபு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதி பிரகாஷ் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது டிஜிபி சார்பில் ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து பின் வழக்கின் எல்லைக்கு அப்பாற்பட்டு தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் ஏற்ற தக்கதல்ல என வாதிட்டிருக்கிறார்.

மேலும் உயிரை பணையம் வைத்து பணியாற்றக்கூடிய காவல் துறையினர் மத்தியில் இந்த கருத்துக்கள் மன உளைச்சல்களை ஏற்படுத்தி இருக்கிறது என சுட்டிக்காட்டிய அவர், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி பிரதிவாதிகளாக இல்லாதவர்கள் பற்றிய கருத்துக்களைத் தெரிவிக்கக் கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் தனி நீதிபதியின் கருத்துக்களை நீக்கம் செய்ய உத்தரவிட்டிருக்கிறார்.