• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணியசாமி திருக்கோவிலில் இன்று முதல் ஆனி மாதம் ஊஞ்சல் திருநாள்

Byகுமார்

Jul 4, 2022

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணியசாமி திருக்கோவிலில் இன்று முதல் ஆனி மாதம் ஊஞ்சல் திருநாள் துவக்கம்.
அருள்மிகு சுப்ரமணியசாமி திருக்கோவில் திருப்பரங்குன்றம் ஆறுபடை வீடுகளின் முதல் படைவீடான திருப்பரங்குன்றத்தில் இன்று முதல் ஆனி மாதம் ஊஞ்சல் திருநாள். இன்று 4 7 2022 இன்று முதல் நாள் திருநாள். ஆனி ஊஞ்சல் திருநாள் இன்று முதல் ஆரம்பம். 13 7 2022 அன்று ஆனி ஊஞ்சல் பத்து நாள் திருவிழா.

சுப்பிரமணியசாமி தெய்வயானை பத்தாம் நாள் நிகழ்ச்சி மாங்கனி வாழைப்பழம் பலாப்பழம் ஆகிய மூன்று கனிகள் வைத்து அன்று மதியம் உச்சிக்கால பூஜையில் மூலஸ்தானத்தில் ஆரம்பித்து சுத்துக்கோயில் அனைத்து தெய்வங்களுக்கும் பரிவார மூர்த்திகளுக்கும் வைத்து தீபாராதனை செய்யப்பட்டு அன்று இரவு சுப்பிரமணியசாமி தெய்வயானை சிறப் அபிஷேகம் அலங்காரம் நடைபெறும். மாலை சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்று கோவிலுக்குள் வலம் வந்து ஊஞ்சல் திருவாச்சி மண்டபத்தில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு தீவாராகணி நடைபெறும். மனதார பிரார்த்தனை செய்து முருகப்பெருமான் தேவயானி அருள் பாலித்த காட்சி.