• Thu. Apr 9th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

திருமங்கலம் காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகம் முற்றுகை

ByKalamegam Viswanathan

Jun 6, 2023

மதுரை மாவட்டம் திருமங்கலம் காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தை 200க்கும் மேற்பட்ட கிராம மக்கள் முற்றுகை- கோவில் திருவிழாவின் போது ஒரு சமூகத்தினர் மீது மட்டும் கைது நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டதாக புகார். (கிராமத்தில் ஜாதி கலவரத்தை தூண்டுவதாகவும் குற்றச்சாட்டு)
மதுரை மாவட்டம் திருமங்கலம் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தை மையிட்டான் பட்டி கிராமத்தைச் சார்ந்த 200-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் முற்றுகையிட்டனர் .


கடந்த சில தினங்களுக்கு முன்பு, இக் கிராமத்தில் ஸ்ரீ முத்தாலம்மன் கோவில் வைகாசி திருவிழா நடைபெற்ற போது , இரு சமுகத்தினரிடைய ஏற்பட்ட கைகலப்பு கலவரமானது. இதில் இரு தரப்பினர் மீது வழக்கு பதிவு செய்த கள்ளிக்குடி காவல் துறையினர், ஒரு சமூகத்தினர் மீது ஒருதலைபட்சமாக கைது நடவடிக்கையில் ஈடுபட்டதால், பாதிக்கப்பட்ட சமூகத்தைச் (அகமுடையர்) சேர்ந்தவர்கள் டிஎஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இவ்வாறு செயல்படுவதன் மூலம் ஜாதி கலவரத்தை தூண்டுவதாக குற்றச்சாட்டையும் தெரிவித்தனர்.
காவல் துறையினர் ஒரு தலைபட்சமாக செயல்படுவதை கைவிட்டு , கிராமத்தினுள் சமூக ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும் என கிராம மக்கள் முறையிட்டுச் சென்றனர்…