• Sat. Mar 21st, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

மதுரையில் 1520 கிலோ ரேஷன் அரிசியை கடத்தி வந்த மூன்று வாலிபர்கள் கைது

ByKalamegam Viswanathan

Apr 27, 2023

மதுரை மண்டேலா நகர் 4 வழி சாலை 1520 கிலோ ரேஷன் அரிசியை வாகனத்தில் கடத்தி வந்த மூன்று வாலிபர்கள் கைது.
மதுரை விமான நிலையம் அருகே உள்ள மண்டேலா நகர் நான்கு வழிச்சாலையில் குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை போலீசார் வாகன தணிக்கை ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில் வாகனத்தில் 40 கிலோ எடை கொண்ட 38 ரேஷன் அரிசி மூட்டைகளில் 1520 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது.
தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் மதுரை முனிச்சாலை பகுதியைச் சேர்ந்த கண்ணன், மதுரை கேட்லாக் ரோடு பகுதியைச் சேர்ந்த சந்தோஷ், மதுரை முனியாண்டி பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த அரிசி உரிமையாளரும், ஓட்டுரமான வினோத் ஆகிய மூவர் என்பது தெரிய வந்தது எனவே அவர்களை போலீசார் கைது செய்து 1520 கிலோ ரேஷன் அரிசி மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்தனர்.