• Sat. Apr 20th, 2024

ஜெயங்கொண்டம் நகராட்சி முன் தூய்மை பணியாளர்கள் வேலை கேட்டு ஒப்பாரி போராட்டம்

ஜெயங்கொண்டம் நகராட்சி முன் நேற்று காலை முதல் தூய்மை பணியாளர்கள் வேலை கேட்டு ஒப்பாரி வைத்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாலை 7 மணி அளவில், ஆணையர், விசிகாவை சேர்ந்த  நகராட்சி தலைவரின் கணவர், திமுகவைச் சேர்ந்த துணைத் தலைவர், மதிமுக கவுன்சிலரின் கணவர் ஆகியோர் பத்திரிக்கையாளர்களை வெளியேற்றிவிட்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

ஜெயங்கொண்டம் நகராட்சியில் 21 வார்டுகளிலும், சுமார் 18 வருடங்களாக 134 பேர் தூய்மை பணியாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். 40 பேர் டெங்கு ஒழிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கரோனா காலத்தில் சிறப்பாக பணிபுரிந்ததாக பொதுமக்களால் பாராட்டப்பட்ட தூய்மை பணியாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு ஒப்பந்ததாரர் மூலம் நாள் ஒன்றுக்கு 385 ரூபாய் சம்பளம் ஒதுக்கப்பட்டு ஒப்பந்ததாரர் மூலம் 270 சம்பளம் வழங்கப்பட்டு வந்துள்ளது.18 வருடங்களாக ஒவ்வொருவருக்கும் இதுவரை இபிஎப் 22 ஆயிரம் ரூபாய் பிடித்த செய்யப்பட்டுள்ளது, மேலும் ஒவ்வொருவருக்கும் 46 ஆயிரம் ரூபாய் சம்பள பாக்கி உள்ளது. தற்பொழுது  புதிதாக ஒருவர் ஒப்பந்தம் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. புதிய ஒப்பந்ததாரிடம் இருந்து ஜெயங்கொண்டம் பகுதியைச் சேர்ந்த திமுக வை சேர்ந்த முக்கிய நபர்  சப் ஒப்பந்ததாரராக பெற்றுள்ளார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் சப் ஒப்பந்ததாரர் தூய்மை பணியாளர்கள் 34 முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும் குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு கல்வித் தகுதி இருந்தால் மட்டுமே பணி வழங்கப்படும் என்று கூறியது டன். 73 தூய்மை பணியாளர்களுக்கு மட்டுமே வேலை என்று கூறியதாக கூறப்படுகிறது. இதனால்  18 வருடங்களாக பணிபுரிந்து தற்போது வேலை இழந்துள்ளனர். இது குறித்து தொழிற்சங்கம் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் தூய்மை பணியாளர்கள் உட்பட வேலை இழந்த தூய்மை பணியாளர்கள் அனைவரும் ஜெயங்கொண்டம் நகராட்சி முன் நேற்று மாலை முதல் வேலை உறுதி கடந்த 25ஆம் தேதி  காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாலை 8 மணி அளவில் ஆணையர் பேச்சுவார்த்தை நடத்தி இன்னும் இரண்டு மாதத்திற்கு அனைவருக்கும் வேலை வழங்கப்படும் நீதிமன்ற உத்தரவு படி பின்னர் முடிவு செய்யப்படும் என்று கூறியதை தொடர்ந்து பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு களைந்து சென்றனர். இந்நிலையில் நேற்று காலை புதிய ஒப்பந்ததாரருக்கு அனுமதி வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது இதை அறிந்த தூய்மை பணியாளர்கள் நகராட்சி அலுவலகம் முன் நேற்று காலை முதல்வேலை கேட்டு ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 
மாலை 7 மணி அளவில் ஆணையர் மூர்த்தி, விசிகவைச் சேர்ந்த நகராட்சி தலைவர் சுமதிக்கு பதில் அவரது கணவர் சிவக்குமார், திமுக நகர தலைவரும் துணைத் தலைவருமான கருணாநிதி, மதிமுக கவுன்சிலருக்கு பதில் அவரது கணவரான புகழேந்தி, விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த இலக்கிய தாசன் உட்பட சிலர் ஆணையர் (ரூமில்) அறையில். தொலைக்காட்சி மற்றும் பத்திரிகையாளர்களை வெளியேறச் சொல்லி  வெளியேற்றிவிட்டு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *