திண்டுக்கல் மாவட்டம் பழனி துணை காவல் கண்காணிப்பாளர் தனஜெயன் உத்தரவின் பேரில் பழனி நகர போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்பொழுது பழனி உழவர் சந்தை பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வருவதாக வந்த தகவலின் பேரில் அங்கு விரைந்து சென்ற போலீசார்.

அப்பகுதியில் தீவிர சோதனை நடத்தினர். அப்பொழுது சந்தேகத்திற்கிடமாக அப்பகுதியில் சென்ற மூன்று இளைஞர்களை பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது. மணிகண்டன் மாயவன் இளவேனில் ஆகிய மூன்று இளைஞர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.