சிவகங்கை சாம்பவிகா பள்ளியில் முதலிடம் பெற்ற மாணவி மற்றும் பெற்றோர் பள்ளியின் நுழைவாயிலை வணங்கிச் சென்று பள்ளியின் தாளாளர் A.M. சேகர் அவர்களிடம் வாழ்த்து பெற்று நன்றி தெரிவித்தனர்.
சிவகங்கை சாம்பவிகா பள்ளி மாணவி
R.மாசிலா ஏஞ்சலின் 494 ,
P. சீதாலட்சுமி 494 ,
S. அக்ஷயா ஸ்ரீ 494 .
ஆகியோர் முதலிடம் பிடித்தும் ,
S. அக்ஷயா ஸ்ரீ 493 , இரண்டாம் இடமும்
V. காருண்யா 492 , மூன்றாம் இடமும்,
S ஹர்ஷித் ராஜலிங்கம் 490 மதிப்பெண் எடுத்து நான்காம் இடம் பிடித்துள்ளனர். படிக்கும் நேரத்தில் சரியாக படித்ததாகவும் விளையாடும் நேரத்தில் விளையாடியதாகவும் தனக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு நன்றி தெரிவித்தார் . அதுபோல் சாம்பவிகா பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவிகள் கூறும்போது ஆசிரியர்களின் தனித்தேர்வு மற்றும் ஒரு மதிப்பெண் தேர்வுகள் எழுதியது எங்களது வெற்றிக்கு உறுதுணையாக இருந்ததாகவும் கூறினர். மேலும் தங்களது பெற்றோர் ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவித்தனர். சாம்பவிகா பள்ளியில் முதலிடம், இரண்டாம் இடம் பெற்றதற்கு மகிழ்ச்சி தெரிவித்தனர். இவர்களுடன் பள்ளி தலைமை ஆசிரியர் J U தியாகராஜன், 10ம் வகுப்பு பொறுப்பாசிரியர் P மகர ஜோதி , தமிழ் ஆசிரியர் சக்திவேல், கணித ஆசிரியர் சுதீப் சந்திரன் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் தடியப்பன் அவர்கள் மாணவ மாணவிகளுக்கு பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.
